எம்பிலிப்பிட்டி கல்வி வலயத்தின் கொடக்கவலை பிபிலேகமை மகா வித்தியாலயத்தில், 4 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தை பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார ஆகியோர் இன்று (19) திறந்துவைத்தனர்.
25 இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினி உபகரணங்களும் வழங்கப்பட்டதுடன்,
பிபிலேகமை மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று, உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றுப் பல்கலைகழகம் தெரிவான மாணவர்கள் நால்வரும், கல்வியற் கல்லூரிக்குத் தெரிவான ஒரு மாணவனும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்குப் புலமைப் பரிசீல்கள் வழங்கப்பட்டன.










