கனவரல்லை தோட்டத்தில் புதிய வீடுகள் நிர்மாணிக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் கனவரல்லை தோட்டத்தில் 57 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை (05) அடிக்கல் நாட்டப்பட்டது.
அமைச்சர் சமந்த வித்தியாரத்தின, அம்பாந்தோட்டை உதவி இந்திய உயர்ஸ்தானிகர் ஹர்விந்தர் சிங் ஆகியோரின் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்தியாவின் 10 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
-இந்திய உயர்ஸ்தானிகராலயம்,கொழும்பு
