தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத்தொழிலாளர் குடும்பங்களின்; நலனில் அரசாங்கம் கரிசனை காட்டி செயல்பட வேண்டும். சி.ப.சீலன்
இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் 28ஆம் திகதிகளில் ஏற்பட்ட தித்வா சூறாவளியில் இருபத்தைந்து மாவட்டங்களில் பத்து மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.
அவ்வாறு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நுவரெலியா, மாத்தளை, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.
உண்மையை உள்ளது உள்ளப்படி குறிப்பிடின் பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள தோட்ட நிர்வாகங்களினால் நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்புகளில் வாழ்வதனால் அரசாங்கத்தினை வீட்டு வாடகைக்காக வழங்கப்படும் இருபத்தைந்து ரூபாயைப் பெறுவதற்கோ தமக்கென வீடுகளை தீர்மானிப்பதற்கென அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஐம்பது இலட்சம் ரூபாயைப் பெறுவதற்கோ தமக்கென வீடுகளை நிர்மானிக்க பத்து பேச்சஸ் காணியை பெறுவதற்கோ அருகதை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு, போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் தித்வா சூறாவளி ஏற்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் கூடாரங்களிலும், கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பாடசாலைகள் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டவர்களாக பலவிதமான அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தவர்களாக தமது பிள்ளைகளை உரிய முறையில் பராமரிக்க முடியாதவர்களாக கழிவறை, நீர் வசதிகள் உரிய விதத்தில் வழங்கப்படாதவர்களாக நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையை உள்ளது உள்ளப்படி குறிப்பிடின் பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள தோட்ட நிர்வாகங்களினால் நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்புகளில் வாழ்வதனால் அரசாங்கத்தினை வீட்டு வாடகைக்காக வழங்கப்படும் இருபத்தைந்து ரூபாயைப் பெறுவதற்கோ தமக்கென வீடுகளை தீர்மானிப்பதற்கென அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஐம்பது இலட்சம் ரூபாயைப் பெறுவதற்கோ தமக்கென வீடுகளை நிர்மானிக்க பத்து பேச்சஸ் காணியை பெறுவதற்கோ அருகதை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
தமது குடியிருப்புக்களின் சுவர்களில் வெடிப்புக்கள், தரைகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைத் தோட்ட நிர்வாகங்கள் அவர்களின் குடியிருப்புக்களுக்குச் சென்று குடியிருக்கும்படி கூறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பாதிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள காணிகளை ஆராய்ச்சி செய்து அந்தக் காணிகள் குடியிருப்பதற்கு ஏற்றவை என அறிவித்துள்ளதாகப் பத்திரிகை செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.

ஜனாதிபதி அனுர குமார திசானாயக தனது தலைமையிலான அரசாங்கம் இன, மொழி வேறுபாடுகளைப் புறந்தள்ளி இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும்; சமவுரிமைகளை வழங்கிச் செயற்படுவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்படுவதாக மேடைகளில் முழங்கி வருகிறார்.
எனவே, மூன்று மாதங்கள் முற்று முழுதாக கடந்துள்ள இந்தக் காலத்திலும் தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டு கூடாரங்;கள், பாடசாலைகள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் அரச கட்டங்கள் ஆகியவற்றில் அடிப்படை வசதிகள் கூட இல்லாதவர்களாக வாழும் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மூலம் மண்ணைப் பரிசோதிக்கச் செய்து எதிர்காலத்தில் இயற்கை அனர்த்தம் ஏற்பட வாய்ப்பில்லாத காணிகளைத் தெரிவு செய்து தோட்ட தொழிலாளர் குடும்பம் ஒன்றிற்கு பத்து பேச்சஸ் காணியை ஒதுக்கி, அந்தக் காணிகளில் தோட்டதொழிலாளர்களுக்கென வீடுகளை நிர்மாணித்து வழங்க காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீடுகளை நிர்மாணிக்கத் தெரிவு செய்யப்படவுள்ள காணிகள், பாடசாலைகள், போக்குவரத்து, மின்சாரம் ஆகிய வசதிகளைக் கொண்டவையாக இருப்பது அத்தியவசியம்.
நமது நாடு தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டதன் பின்பு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பல புலம்பெயர் அமைப்புக்கள், சமூக நிறுவனங்கள் பெருந்தொகையான நிதியை அரசாங்கத்துக்கு வழங்கின.
அந்த நிதியைக் கொண்டு அரசாங்கம் தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டு பல மாவட்டங்களிலும் வாழ்த்து கொண்டிருக்கும் தோட்ட தொழிலாளர்களின் நலனின் கரிசனை கொண்டு மேலும் காலதாமதமின்றி செயற்பாடுகளை முன்னெடுத்து அவர்களை நிம்மதியுடனும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைக்க வேண்டும்.

சுருக்கமாகக் குறிப்பிடின் ‘ ஆடுகிற மாட்டை ஆடிக்கறக்கணும் பாடுகிற மாட்டை பாடி பாடிக்கறக்கணும் ” என்பதை மனத்தில் இருத்தி அரசாங்கம் செயல்பாட்டால் பெருந்தோட்டங்களில் இருந்து தோட்டத் தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க முடிவதோடு, வெளியேறியவர்கள், வெவ்வேறு தொழிற்துறைகளை நாடிச்சென்றுள்ள மலையக இளைஞர்கள், யுவதிகளைத் தோட்ட தொழிற்துறைக்கு உள்வாங்கிக் கொள்ள வழி பிறக்கும். நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சிப் பெறும்.
சி. ப.சீலன்
