பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஏற்பாட்டில் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய,அமைச்சர் சமந்த வித்யாரத்ன,
பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, மஹிந்தஜயசிங்க ஆகியோரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளைப் பெறுவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
தோட்டப் பாடசாலை ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்சம் 2 ஏக்கர் காணியை சட்டபூர்வமாக ஒதுக்குது தொடர்பாகவும் தித்துவா பேரிடரினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு உடனடி; தற்காலிக;நிரந்தரக் கட்டட நிர்மாண தீர்வுகளை விரைவாக வழங்குவது தொடர்பாகவும் அனைத்து மாவட்டங்களிலும், விஞ்ஞான ஆய்வகம், கணினிக் கூடம், நூலகம்,விளையாட்டுப் பிரிவைக் கொண்ட முழுமையான வசதிகளுடைய தமிழ் மொழி மூல 1AB மாதிரி பாடசாலைகளை உருவாக்குவது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, மலையக கல்வி அபிவிருதிக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான விரைவான நடவடிகைக்களுக்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதியளிதார்.
இந்நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களைப் பிரதிநிதிதுவப்படுதும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வியலாளர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துகளை முன்வைத்தனர்.








