நீர்கொழும்பு கைதிகள் மட்டக்களப்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 60 கைதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (07) மாலை கொண்டு செல்லப்பட்டனர்.
விசேட அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட அவர்கள், சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திக்க ரங்கன பெரேராவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பொலனறுவை சிறைச்சாலைக்கு 63 பேர் கொண்டுசெல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மற்றொரு தொகுதியினர் அங்குனுகொலபலஸ்ஸா சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
நீர்கொழும்பு சிறைச் சம்பவம்: அமைச்சர் பொறுப்பேற்றார்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் 07 பேர் உட்பட 26 பேர் உயிரிழந்து 100 பேர் வரை படுகாயமடைந்தனர்.
பின்னர் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பூஸ்ஸ சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட கைதி ஒருவரும் உயிரிழந்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கைதிகள் அழைத்து வரப்பட்டதையடுத்து சிறைச்சாலைப் பகுதியைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
