தோட்டத்தை உருவாக்கியவனுக்கு வீடில்லை என்பது அநீதியாகும் என்ற மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ராஜ்குமார் தெரிவித்தார்.
காட்டை வெட்டித் தோட்டம் உருவாக்கியவனுக்கு இன்று வாழ்வதற்கு வீடில்லாமல் அநாதையாக நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
தோட்டங்களில் மக்கள் வாழும் வீடும் சூழலுமாக 20 பேர்ச் காணியை வழங்க வேண்டும் என்று மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ராஜ்குமார் நேற்று (16) சபை அமர்வில் வலியுறுத்தினார்.
அண்மையில் தொழிலாள குடும்பங்கள் நிர்க்கதியான நிலையை அடைந்தமைக்குத் தனது வருத்தத்தைத் தெரிவித்த திரு. ராஜ்குமார், இந்த நிலையைக் கடுமையாகக் கண்டித்துக் கருத்து தெரிவித்தார்.
நேற்று 16 ஆம் திகதி வியாழக்கிழமை மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் மாதாந்த அமர்வு அச்சினிக்கா மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் தலைமை வகித்துப் பேசிய திரு. இராஜ்குமார் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் காணி உரிமை அவசியம். குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் இன்று அநாதைகளாக நமது இலங்கை திருநாட்டில் உள்ளனர்.
இலங்கையில் உள்ள காடுகளை அழித்து தேயிலை, இறப்பர், தென்னை, கோப்பி, கொக்கோ போன்ற பயிர்களை உருவாக்கித் தோட்டம் உருவாக்கினர்.
இதையும் படியுங்கள்: மலையகத்தில் வீட்டுக்கொரு பட்டதாரி கல்விப்புரட்சி
இன்றுவரை ஐந்து தலைமுறையாக இலங்கையின் பொருளாதாரத்திற்காக உழைத்து வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அவ்வப்போது ஆண்டு வந்த அரசாங்கங்கள் லயின் தொடர் குடியிருப்புகளில் வாழ்வதைக் கண்டு கொள்ளாமல் இருந்தன.
நாட்டில் ஏனைய சமூகங்கள் அனுபவிக்கும் நில உரிமை தோட்டத்தை உருவாக்கியவனுக்கு வீடில்லை என்பது அநீதி!
ஆகவே குறைந்த பட்சம் 20 பேச் காணியை தோட்டக் குடியிருப்புகளில் குடியிருக்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். அதனை வழங்க தற்போதைய நாட்டின் தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன் வர வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார்.
இந்த முன் மொழிவை இன்றைய அமர்வில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி ஏற்றுகொணாடனர்.
மஸ்கெலியா நிருபர்
