2026 ஆம் ஆண்டின் புவி தினம் (Earth Day) ஏப்ரல் 22, புதன்கிழமை அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சூரியன் அதிரடி நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் புவி நாள் திம்புள்ளை பத்தனையில் கொண்டாடப்ப்ட்டது.
இந்த ஆண்டு “எங்கள் சக்தி, எங்கள் கிரகம்” (Our Power, Our Planet) என்ற கருப்பொருளின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழி (பிளாஸ்டிக்) மாசுபாட்டைத் தடுத்தல், நிலையான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல் போன்ற செயல்பாடுகளுக்கமைய சூரியன் அதிரடி நற்பணி மன்றம் ஏற்பாட்டில் திம்புள்ளை பத்தனையில் மரக்கன்றுகள் ப்ளூமிங் பிட்ஸ் பாலர் பாடசாலையிலும்,பிரைட் ஸ்டார் பாலர் பாடசாலையிலும் சிறுவர்களுடன் இணைந்து நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சூரியன் அதிரடி நற்பணி மன்றத்தின் தலைவர் லிந்துலை ராஜ்குமார், செயலாளர் கெலிவத் மாரிமுத்து,திப்புள்ளை சசிகலா, ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.



