புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பிருந்து பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியச் சகோதர சகோதரிகளுக்கும் தனது இதயங்கனிந்த பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகப் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பசியின் கொடுமையை உணர்ந்து ஏழை எளியவர்களுக்குப் பகிர்ந்து அளிப்பதன் மூலமும், பிறர் மீதான சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிப்பதன் மூலமும் இந்தப் பெருநாள் நமக்கு உன்னதமான மனிதநேயப் பாடத்தைக் கற்றுத் தருகிறது.
எமது தாய்நாடான இலங்கையில் பல்லின மக்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வு, கௌரவம்,நல்லிணக்கம் மேலோங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இந்தப் பெருநாள் தினத்தில் நாம் அனைவரும் இன, மத பேதங்களைக் கடந்து, ஒருமித்த நாட்டுப் பிரஜைகளாகத் தேசத்தின் முன்னேற்றத்திற்காக கைகோப்போம் என இத்தருணத்தில் அழைப்பு விடுப்பதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
