வெற்றிக் கேடயத்துடன் மோதிரம் வழங்க பீபா முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2026 உலகக் கோப்பை சாம்பியன்களுக்கு கோப்பையுடன் கூடுதலாக ‘சாம்பியன்ஷிப் மோதிரங்களையும்’ வழங்க முடிவு உலக கால்பந்து கூட்டமைப்பு (FIFA)செய்துள்ளது.
உலகக் கோப்பை வரலாற்றில் இது நடப்பது இதுவே முதல் முறையாகும்.
விளையாட்டு உலகில் இதுபோன்ற அங்கீகாரம் பொதுவாக NFL மற்றும் NBA போன்ற அமெரிக்காவில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளின் போது வழங்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு உலகக் கோப்பை சாம்பியன் அணிக்கு 30 மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.
இதையும் வாசிக்கலாம்: சிறந்த கிரிக்கட் வீரர் சோபர்ஸ் காலமானார்
இருப்பினும், மேலும் 1,996 மோதிரங்கள் விளையாட்டு ரசிகர்களுக்கு விற்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதிரங்களின் மொத்த எண்ணிக்கை 2,026 என்பதும் குறிப்பிடத்தக்கது.
