பன்விலை கந்தகட்டி தமிழ் மகா வித்தியாலயத்தின் நலன் விரும்பிகளின் உதவியொடு பாடசாலைக்குத் தேவையான பல்வேறு உதவிகளை ஆசிரியர் விக்னேஷ்வரன் பெற்றுக்கொடுத்துள்ளார். நவராத்திரி விரதகாலத்தில் பாடசாலையின் நீண்டகால தேவையாய் இருந்த முப்பெருந்தேவிகளின் திரு உருவப்படங்களையும் பிள்ளையார் சிலை ஒன்றினையும் அதிபர் சுமன் இராஜேந்திரனிடம் நேற்று (14) கையளித்தார்.



அதைத் தொடர்ந்து பாடசாலையின் கிரியாகால குருக்கள் ஹம்சபிரியன் குருக்கள் புண்ணியதான பூஜைகள் நடத்தி, ஓம குண்டல பூஜைகளையும் நடத்தினார்.
பாடசாலையின் இந்து மாமன்றம் தலைமை தாங்கியதோடு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஆதரவும் இதற்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிபர் சுமன் இராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
