பன்விலை மடுல்கலை, சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்ச்சி பாடசாலை அதிபர் எம். நவநீதன் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.



இதில் ஆசிரியர்களின் கலை,வேடிக்கை நிகழ்ச்சிகள்,மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டியும் நன்றியறிதலின் சின்னமாகவும் அவர்களுக்குக் கௌரவமளிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் அதிபர் வழங்கினார்.
