வட்டகொடை ஹொலிரூட் வீதி அபிவிருத்தி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்கள் வி. சுதர்ஷன்,ஆர். சாந்தினி ஆகியோரின் கோரிக்கைக்கு இணங்க, சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் முன்வைத்த வேலைத்திட்ட முன்மொழிவின்படி, மத்திய மாகாண சபையின் 20 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கிட்டின் கீழ், வட்டகொடை வட்டாரத்தின் ஹோலிரூட் பகுதியில் வீதி அபிவிருத்தி வேலைதிட்டம் நேற்று (05) அடிக்கல் நாட்டி ஆரம்பிக்கப்பட்டது.



இந்திகழ்ச்சியில் கொட்டகலை பிரேதச சபையின் தலைவர் இராஜமணி பிரஷாந்த், உறுப்பினர் வி. சுதர்ஷன்,பிரதேச பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
