நுவரெலியா மாவட்டத்தின் ஹற்றன் கல்வி வலயத்திலுள்ள மெராயா தமிழ் வித்தியாலயம் மீண்டும் சாதனை படைத்துள்ளது.
O/L பரீட்சையில் 90% ஒட்டுமொத்தச் சித்திகளைப் பெற்றுள்ளது. மாணவிகள் விஜய்குமார் ஜெரோமியா, சந்திரமோகன் கவிஷாலனி, ஆறுமுகம் ஹன்சிகா ஆகியோர் சிறப்புப் பெறுபேறு பெற்றுள்ளனர். அவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளார்கள். மேலும் ஐவர் ஒன்பது பாடங்களிலும் சித்திபெற்றுள்ளனர்.

இவ்வாண்டு பரீட்சையில் பாடசாலை 90% ஒட்டுமொத்தச் சித்தி வீதத்தைப் பதிவு செய்து தனது கல்வித் தரத்தையும் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது.
அனைத்து பாடங்களில் 100% சித்தி வீதம் பெறப்பட்டிருப்பது மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாகக் கருதப்படுகிறது.

மாணவர்களின் அர்ப்பணிப்பும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் இணைந்து பெற்றுள்ள இந்த வெற்றி அனைவராலும் பாராட்டப்படுகிறது.
மேலும் தமிழ் மொழி 95%, விஞ்ஞானம் 95% மற்றும் வரலாறு 90% என்ற உயர்ந்த பெறுபேறுகளும் பாடசாலையின் கல்வித் தரத்தை வெளிப்படுத்துகின்றன. ஆங்கிலப் பாடத்தில் 47% பெறுபேறு பதிவாகியுள்ள நிலையில், எதிர்காலத்தில் அதற்கும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டால் அனைத்து பாடங்களிலும் இன்னும் உயர்ந்த சாதனைகளைப் அவரது இந்த சாதனை ஏனைய மாணவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
இந்த மகத்தான வெற்றியின் பின்னணியில் பாடசாலை அதிபரின் சிறந்த நிர்வாகமும், ஆசிரியர்களின் அயராத உழைப்பும், மாணவர்களின் விடாமுயற்சியும், பெற்றோர்களின் ஒத்துழைப்பும் முக்கிய பங்காற்றியுள்ளன.

பாடசாலை அதிபர் காந்திபன் இந்த வரலாற்றுச் சாதனைக்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்திலும் இதைவிட உயர்ந்த கல்விச் சாதனைகளை நோக்கி
மெராயா தமிழ் வித்தியாலயம் இப்பிரதேசத்தின் முன்னணி கல்வி நிலையங்களில் ஒன்றாக மீண்டும் தன்னை நிலைநிறுத்தியுள்ளதோடு, எதிர்காலத்திலும் பல கல்விச் சாதனைகளைப் படைத்து மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனைக்குக் காரணமான அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
மெராயா தமிழ் வித்தியாலயத்தின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்
கௌசல்யா

