மூளைக்காய்ச்சல் நோயால் இதுவரை 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தியத்தலாவை பகுதியில் 28 நோயாளர்கள், வெலிமடை பகுதியில் 13 நோயாளர்கள், ரிக்கிலகஸ்கடை பகுதியில் 25பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தொற்று நோய் விசேட மருத்துவ நிபுணர் பாலித்த கருணாபேம தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாள்களில் ஏற்படும் மழை நிலைமைக்கு மத்தியில் அன்னதானம் வழங்கும் செயற்பாடுகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் மருத்தவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
