நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கின்றது.
நாவலப்பிட்டி நகரில் கண்டி, கம்பளை வீதியிலும் பஸ் தரிப்பிடத்திலும் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழையால் மழை நீர் புகுந்து வருகிறது.
இதன் காரணமாக பஸ் தரிப்பிடத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குக் கழிவு நீருடன் கலந்து வெள்ள நீர் உட் புகுவதாலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதாலும் வாகன ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பாதசாரிகள், பயணிகள், பாடசாலை மாணவர், பஸ் நிலையப் பகுதியில் வர்த்தகம் செய்வோர் பெரிதும் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி.பெருமாள்

