வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மஸ்கெலியா பிரதேச சபையின் நிகழ்ச்சிகள் இன்று (31) நள்ளிரவு வரை தொடர்கின்றன.
இந்த நிகழ்வினைக் கடந்த 29 ஆம் திகதி மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார்,உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக், பிரதேச சபையின் செயலாளர் எஸ் . ராஜவீரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
ஆரம்ப நாளான 29 ஆம் திகதி மஸ்கெலியா பிரதேச சபை, மஸ்கெலியா ஐக்கிய நலன்புரி வர்த்தக சங்கம் இணைந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச் செல்வி, மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், மஸ்கெலியா சுமனாராம விகாரையின் மத குரு தப்போவன சுஜீத தேரர், மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலய பிரதம குரு,மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார, உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக்,மஸ்கெலியா பிரதேச சபையின் அதிகாரிகள், மஸ்கெலியா ஐக்கிய நலன்புரி வர்த்தக சங்கத் தலைவர் அடங்கலாக அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
29 ஆம் திகதி மாலை 6 மணிக்கு மஸ்கெலியா பொது விளையாட்டு மைதானத்தில், 13 பாடசாலை மாணவர்களின் வெசாக் கூடுகள் அமைத்து பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் ஆரம்பிக்கப் பட்டது.
வெசாக் வலயத்தின் மின் ஒளியை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி,மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார,உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் ஆகியோர் வழங்கி ஆரம்பித்து வைத்தனர்.
மின் இணைப்பு வழங்க பட்ட பின்னர் மஸ்கெலியா பகுதிகளில் உள்ள 10 ஆம் வகுப்பிற்கு மேல் உள்ள 13 பாடசாலைகள் கலந்து கொண்டதில், முதல் மூன்று பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. முதலாவது இடத்தை மஸ்கெலியா சமநெலிய மஹா வித்தியாலயமும் இரண்டாம் இடத்தை சாமிமலை தெய்வகந்தை தமிழ் வித்தியாலயமும் மூன்றாம் இடத்தை சாமிமலை சிங்கள பாடசாலையும் பெற்றுக் கொண்டன.
இவ்வாறு தெரிவான பாடசாலைகளுக்கு முறையே 10 ஆயிரம் ரூபாய் 7500/= ரூபாய் 5000/= வழங்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் கலந்து கொண்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஆறுதல் பரிசு,சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 31 ஆம் திகதி இன்று இரவு 12 மணி வரை வெசாக் வலயம் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


