வெசாக் பௌர்ணமி நாள் நாளை (29) முதல் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் ஆரம்பிக்கின்றது.
இந் நிகழ்வை மஸ்கெலியா பிரதேச சபை, மஸ்கெலியா வர்த்தக சங்கம் இணைந்து ஏற்பாடு செய்து உள்ளன. நிகழ்வில் நாளை காலை 11 .55 இற்கு மஸ்கெலியா பொது மைதானத்தில் வெசாக் கூடுகள் அமைத்து அங்கு சிறப்பான வெசாக் கூடுகள் அமைக்கும் பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அதில் முதலாம் இடம், இரண்டாம் இடம், மூன்றாவது இடம் முறையே 10000/= ரூபாய் 7500/= ரூபாய் 5000/= ரூபாய் பணப் பரிசில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை 29 ஆம் திகதி மதியம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்பாக அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆராச்சி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

