தலவாக்கலையில் உயர் தொழினுட்ப வளாக பட்டமளிப்பு விழா இன்று (19) சிறப்பாக நடைபெற்றது.
தலவாக்கலை உயர் தொழில்நுட்ப வளாகத்தின் 5ஆவது பட்டமளிப்பு விழா இன்று தலவாக்கலை வியூ விருந்தகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக மனித உரிமைகள் சாசனத்தின் இயக்குநர் டாக்டர் ரஷ்மினா நௌஃபர் கலந்து கொண்டார்.
பிரதேசசபை உறுப்பினர்கள், தலவாக்கலை காவல் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி, காவல் நிலையத்தின் பிரதி காவல் கண்காணிப்பாளர், ஹற்றன், நுவரெலியா பகுதி கல்வியாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்கலாம்: மாணவத் ததலைவர்களுக்கு சின்னம் சூட்டும் வைபவம்
மேலும், நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி மண்டலங்களுக்குள் உள்ள அரசாங்கப் பள்ளிகளின் பல முதல்வர்கள், ஆசிரியர்கள், சிரேஷ்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.



இன்று தலவாக்கலையில் உயர் தொழினுட்ப வளாக பட்டமளிப்பு விழாவில், தகவல் தொழில்நுட்பம், தொடர்பியல், தையல், கேக் தயாரித்தல், புகைப்படம் எடுத்தல், காணொளி எடுத்தல் உள்ளிட்ட
பல்வேறு துறைகளில் படிப்பை வெற்றிகரமாக முடித்த 200 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
ஹை-டெக் வளாகத்தின் நிர்வாக இயக்குநர் சாயன்ராஜ், நிர்வாகச் செயலாளர் திருமதி ஆர். கிஷானி ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இந்த விழா மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கௌசல்யா
