மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவில் சித்திரைப் புத்தாண்டு விழா இன்று (ஏப்பிறல் 26) வெகு சிறப்பாக நடைபெற்றது.
மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் எம். எச். இர்ஷாட் தலைமையில் காலை 9.30இற்கு விழா ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட சுகாதார அத்தியட்சகர் வைத்திய கலாநிதி அசேல பெரேரா விசேட அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விசேட வைத்திய நிபுணர் ரந்தெனிய, வைத்திய கலாநிதி பிரபாஷர ஆகியோருடன் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி, சுகாதார அத்தியட்சகர் பிரிவில் உள்ள அனைத்து தாதியர்கள், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், உப தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் அதிதிகள் சென் ஜோசப் தேசிய கல்லூரியின் மாணவிகள்,சமனேலிய வித்தியாலய மாணவ மாணவியர்களின் வரவேற்பு நடனத்துடன் அழைத்து வரப் பட்டனர்.

புத்தாண்டு சமய நிகழ்வுகள் சுமனாராம விகாரையின் பௌத்த மத குரு, இந்து,கிறிஸ்தவ,இஸ்லாமிய மதகுருமார்களின் ஆசீர்வாதம் இடம் பெற்று விளையாட்டு போட்டிகளில் நடைபெற்றன.
சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் மரதன் ஓட்டப் போட்டி இடம் பெற்றது. இதில் ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஏனைய போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மஸ்கெலியா நிருபர் செ. தி.பெருமாள்
