புளியாவத்தை ஆரம்ப தமிழ் வித்தியாலய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கடந்தகால வினாத்தாள் பொதி வழங்கும் நிகழ்ச்சி
புளியாவத்தை ஆரம்ப தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு, மேலதிகப் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ஹொன்ஸி கல்லூரியில் 1999ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களினால், புலமைப்பரிசில் பரீட்சைக்கான கடந்தகால வினாத்தாள் பொதி வழங்கும் நிகழ்ச்சி பாடசாலை பிரதான மண்டபத்தில் உதவி அதிபர் மு. ஞானசேகரம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பி. பரமசிவம், ந. டேனி சிவானந்தன், து. சத்தியமூர்த்தி, பி. சந்திரமோகன், சு. கிருஷ்ணகுமார், மு. புஷ்பகுமார் ஆகியோர் ஹொன்ஸி கல்லூரியின் 1999ஆம் ஆண்டு சாதாரண தர பழைய மாணவர்கள் சார்பாக உதவிகளை வழங்கினர்.
நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக ஹொன்ஸி கல்லூரி அதிபர் ஆ. மதியழகன், புளியாவத்தை ஆரம்ப தமிழ் வித்தியாலய அதிபர் ஆ. குமாரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் விசேட விருந்தினர்களாக எம்பெல்பீல்ட் பிரிவு கிராம சேவையாளர் கிருஷ்ணமூர்த்தி, தெக்கோயா தெற்கு பிரிவு கிராம சேவையாளர் ஏ.எஸ். டார்வின், இன்ஜெஸ்ட்ரி பிரிவு கிராம சேவையாளர் திருமதி ந. அற்புதமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் போடைஸ் எஸ்டேட் குடும்பநல உத்தியோகத்தர் செல்வி சு. உஷாந்தினி, பட்டலகலை எஸ்டேட் குடும்பநல உத்தியோகத்தர் செல்வி சி. வயலட் ஆகியோரும், தரம் 5 மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்






