புசல்லாவை சங்குவாரி தோட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சந்தனம் சத்தியநாதன் இன்று (04) பிறந்த நாள் கொண்டாடுகிறார்.
எண்பதுகளில் எழுத்துலகப் பிரவேசம் செய்த சந்தனம் சத்தியநாதன் மலையக அரசியலும் சமூக வாழ்வும், வழி பிறக்குமா, மூடு பனி, மலைத் தென்றல், காமன் கூத்து ஒரு கள ஆயவு ஆகிய ஐந்து புத்தகங்களுக்குச் சொந்தக்காரர்.
எழுத்துத் துறையிலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்ட அவர், இலங்கை வானொலியில் மெல்லிசைப் பாடல்களை எழுதியதன் மூலம் ஒரு பாடலாசிரியராகவும் அறிமுகமானவர்.
பாடகர், கவிஞர், நுலாசிரியர், வீதி நாடகக் கலைஞர் எனப் பன்முக ஆளுமைகொண்ட மண்ணின் மைந்தர் சந்தனம் சத்தியநாதனுக்கு மலைக்குருவியின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
