ஏழு வயது சிறுவன் ஒருவன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கடலில் நீந்தி வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளான்.
ராஞ்சியைச் சேர்ந்த இஷாங் சிங் என்ற இந்தச் சிறுவன் தலைமன்னாருக்கும் தனுஸ்கோடிக்குமிடையில் பாக்கு நீரிணையில் 29 கிலோ மீற்றர் தூரத்தை ஒன்பது மணித்தியாலமும் ஐம்பது நிமிடத்திலும் நீந்தி இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார்.
மிக வயது குறைந்த ஒருவர் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்தார் என்ற வரலாற்றுப் பதிவையும் இவர் செய்திருக்கிறார். இந்தச் சாதனையைப் புரிவதற்காகத் தான் தினமும் நான்கு முதல் ஐந்து மணித்தியாலம் பயிற்சி எடுத்துக்கொண்டதாகக் கூறியுள்ளார்.
