பொல்பிட்டி புறோட்லேண்ட் நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (02) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொல்பிட்டி பள்ளேவத்தை பிட்டவளை பகுதியைச் சேர்ந்த 59 வயது உடைய அனுர பிரியந்தா என்ற மன நோயாளி ஒருவர் இன்று முற்பகல் 11 மணியளவில் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள புறோட்லேண்ட் நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் எனப் பொல்பிட்டி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் வட்டவளை மாவட்ட வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

