நாவலப்பிட்டி நகரத்தின் மையத்தில் உள்ள பிரபல தனியார் அங்காடிக்கு குருணாகல்லில் இருந்து லொறியில் பொருள்களைக் கொண்டு வந்திறக்க முற்பட்டபோது உதவியாளர் உயிரிழந்தார்.
அந்த லொறியைப் பின்னோக்கிச் செலுத்தியபோது உதவியாளர் சுவரில் நசிந்து உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சுமார் 24 வயதுடைய இளைஞர் என்று தெரிவித்த நாவலப்பிட்டி பொலிஸார் சாரதியைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
செ. தி. பெருமாள்
