தோல்வி என்பது முடிவல்ல, அஃது ஒரு புதிய தொடக்கம் என்று தி.மு.க எம்.பி. கனிமொழி கருணாநிதி கட்சித் தொண்டர்களை ஆற்றுப்படுத்தியுள்ளார்.
ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். தோல்வி என்பது முடிவல்ல, அஃது ஒரு புதிய தொடக்கம் என்று தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நமக்கு உணர்த்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து புதிய பாடங்கள் கற்போம். சமூகத்தின் அடித்தளத்திலிருந்து இன்னும் வலிமையோடு செயல்படுவோம்
அரசியல் – பண்பாட்டு உரிமைகளைக் காக்கும் நம் வரலாற்றுப் பணியை நவீன சிந்தனைகளோடு தொடர்ந்து மேற்கொள்வோம். வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள அரசுக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
