தமிழ்நாட்டில் 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொங்கு சட்ட சபை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது திமுக 96 இடங்களில் மாத்திரம் வெற்றி பெற்றிருந்தது.
ஆட்சியமைக்க காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு வழங்கியது. அதனால், ‘திமுக மைனாரிட்டி கவர்மன்ற்’ என்று புரட்சித் தலைவி அம்மா அடிக்கடி சொல்வார்.
இந்தத் தேர்தலில் சின்னம்மாவும் விலாசமில்லாமல் போய்விட்டார். நடிகர் விஜய்யின் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அவர் முதலமைச்சராகப் பதவியேற்க இன்னும் 10 உறுப்பினர்கள் தேவை.
கூடுதல் தொகுதிகளில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தாலும், சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும். அதற்கு அதிமுக, பாமக, விசிக, காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை நாடியே ஆக வேண்டும்!
