தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்குத் தேசிய ஆவணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நடமாடும் சேவை. இன்று (26) அம்பகமுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றறது.
கினிகத்தேன அம்பகமுவ பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நுவரெலியா மாவட்ட தேசிய சமாதானப் பேரவையின் அமைப்பாளர் திருமதி இரேஷா உதேனியின் வழிகாட்டலில் அம்பகமு,நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவில் தேசிய அடையாள அட்டை, பாஸ்போட், திருமணப் பதிவு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், காணி உரிமை பத்திரம், மரணச் சான்றிதழ் போன்ற வற்றைப் பெறுவதற்கான இந்த நடமாடும் சேவையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்



