தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி இன்று (30) அடிக்கல் நாட்டி ஆரம்பித்துவைக்கப்பட்டது
கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்களான கோவிந்தராஜ் நேசமலர்,சுந்தரராஜா சுரேஷ் ஆகியோரின் கோரிக்கைக்கு இணங்க கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் முன்வைத்த வேலைத்திட்ட முன்மொழிவின்படி, ரூபாய் 10 இலட்சம் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் தலவாக்கலை ட்ரூப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று (30) அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், உறுப்பினர்களான கோவிந்தராஜ் நேசமலர்,சுந்தரராஜா சுரேஷ்,பிரதேச பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
