பால்மா, திரவப் பால்,யோகட் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அறிவித்துள்ளது.
“BREAKING NEWS” என்ற தலைப்பில் போலித்தகவல்கள் பகிரப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ள அதிகாரசபை, பொதுமக்கள் இவ்வாறான ஆதாரமற்ற செய்திகளை நம்பவோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பரப்புவது நுகர்வோர் மத்தியில் வீண் பயத்தையும், சந்தையில் செயற்கையான குழப்பத்தையும் ஏற்படுத்தும்.
சந்தையில் பொருட்களுக்கு மேலதிக விலை கோரப்பட்டாலோ முறைகேடுகள் நடந்தாலோ, பொதுமக்கள் 1977 என்ற உடனடி உதவி இலக்கத்தைத் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம்.
