அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
கடந்த சில நாள்களாக அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மின் பாவனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் தற்போது கல்வி பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சை நடைபெற்று வருவதால், பரீட்சாத்திகள் பாரிய அளவில் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.
தொடர்ந்து இவ்வாறான நிலை காணப்படுவதால், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
கௌசல்யா
