சிறுவர் பாதுகாப்பை வலியுறுத்தும் அமைதிப் பேரணி வட்டகொடையில் நேற்று (25) நடைபெற்றது.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அமைதிப் பேரணி (Silent Walk),கலை நிகழ்ச்சிகள் நேற்று (2026.08.25) வட்டகொடை நகரில் சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்வு PAOSL Church Watagoda,Zion Kids திட்டம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மத குருமார்கள், STF அதிகாரிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள், சிறுவர்கள் உட்பட பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
சிறுவர்களின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் Silent Walk முன்னெடுக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து வட்டகொடை நகரில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
“சிறுவர் பாதுகாப்பு – அனைவரின் பொறுப்பு” என்ற செய்தியை சமூகத்தில் வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.
தகவல் – ரஷ்யான்
