கோப்புப் படம்
சாமிமலையிலிருந்து மஸ்கெலியா பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் காலை 6.30 இற்கு இ.போ.ச பஸ் இல்லாமையால் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
இந்த வருடம் க.பொ.த சாதாரண தரம், உயர் தரம் பரீட்சை எழுத உள்ள மாணவர்களுக்குக் காலையில் 7.00 மணிக்கு வகுப்புகள் உள்ளதால் நேரத்திற்குச் செல்ல முடியாதுள்ளது.
எனவே, சாமிமலைக்கும் மஸ்கெலியாவுக்கும் இடையில் நிரந்தரமான பஸ்ஸொன்றை சேவையில் ஈடுபடுத்த அக்கறையுள்ள, சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? எடுப்பார்கள் என்று இந்தப் பகுதி மாணவர்கள் நம்புகின்றனர்.
