கொட்டக்கலை நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் (17) இன்று இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற திம்புள்ளை பத்தனை பொலிஸ் அதிகாரிகளும் தாக்கப்பட்டுள்ளனர்.
கொட்டக்கலையில் நடந்த ஒரு திருமணத்திற்கு வந்திருந்த தலவாக்கலை வட்டக்கொடை பகுதியைச் சேர்ந்த குழுவொன்றுக்கும் மதுபோதையில் இருந்த இன்னொரு குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது மோதலை அமைதிப்படுத்தச் சென்ற பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் இரு குழுக்ளும் தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்களைக் காப்பாற்றுவதற்கு மேலும் திம்புள்ளை பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பொலிஸ் குழு ஒன்றும் அங்கு வந்தபோது, அவர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவரை திம்புள்ள பத்தனை பொலிஸார் பெரும் முயற்சிக்குப் பிறகு கைதுசெய்துள்ளனர்.
கடுமையாக மோதலில் ஈடுபட்ட மூவரும் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கொட்டக்கலை பிராந்திய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
கொட்டகலை நகரில் நடந்த மோதலைத் தொடர்ந்து அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மோதலைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பிற்காகவும் தலவாக்கலை, லிந்துலை, நானுஓயா பொலிஸ் நிலையங்களிலிருந்தும் கூடுதல் பொலிஸ் குழு வரவழைக்கப்பட்டது.
கௌசல்யா
