இரத்தினபுரி நகரில் இம்முறை பொசன் கொண்டாட்டங்கள் என்றுமில்லாதவாறு களைகட்டியிருக்கின்றது.
நகரில் வழமைக்கு மாறாக பல தோரணங்கள் ஏட்டிக்குப் போட்டியாக அமைக்கப்பட்டுள்ளன.மணிக்கூட்டுக் கோபுரத்திற்கருகிலும்
களுகங்கைக்குக் குறுக்காகவும் அமைக்கப்பட்டுள்ள மின் தோரணங்கள் மக்களை வெகுவாக கவர்ந்ததை காணக்கூடியதாக இருந்தது
தமிழ் மக்களும் பௌத்த மக்களுடன் இணைந்து தான சாலைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மக்கள் திரள் திரளாக வருகை தந்ததால், நகரினை ஊடறுத்துச் செல்லும் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.



இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்
