வவுனியாவில் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து நாளை(29) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
வடக்கு மாகாண ஆளுநரால், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த
வவுனியா மாநகர சபை மேயர் சுந்தரலிங்கம் காண்டீபன் பதவிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, வவுனியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
நாளைய(29) காலை 10 மணியளவில் வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்தில் இடம்பெறவுள்ள குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வவுனியா மாநகர சபை மக்கள் அனைவரையும் ஜனநாயக வெற்றிக்காக ஒற்றுமையுடன் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்.
தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதித்துவ அரசியலை முடக்குவதற்கும், ஜனநாயகப் பண்புகளுக்கு விரோதமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
“நாம் ஒன்றுபட்டால் நீதியே வெல்லும்” என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், ஜனநாயகத்தை பாதுகாக்கவும், மக்களின் வாக்குரிமையை மதிக்கவும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்ட விபரம்:
திகதி: 29.06.2026
நேரம்: காலை 10.00 மணி
இடம்: வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம்
இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெறவுள்ளதாகவும், ஜனநாயகத்திற்கு ஆதரவளிக்கும் அனைத்து தரப்பினரும் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
