இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் இம்முறை வெசாக் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சகல மாணவர்களும் தனித் தனியாக வெசாக்கூடு அமைத்தனர். அத்துடன் தரம் 1,2 மாணவர்கள் அழைப்பிதழ் செய்ததுடன் வெசாக் கொடிக்கு உரிய நிறந்தீட்டினார்கள்.
தரம் 1,2 மாணவவர்கள் தரம் 3,4,5 மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெசாக்கூடுகளை அமைக்க, பெற்றோர் அவற்றை ஆசிரியர்களின் உதவியுடன் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் உட்புறமும் வெளிப்புறமும் முறையாகக் காட்சிப்படுத்தினர்.
கடந்த 23.05.2026 ஆம் திகதி தொடக்கம் நடைபெற்ற இந்நிகழ்வின் இறுதி நாளான 29 ஆம் திகதி வெசாக் விழா பாடசாலை பிரதான மண்டபத்தில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் இரத்தினபுரி வலய உதவி கல்விப்பணிப்பாளர் ( ஆரம்ப கல்வி) திருமதி ரணதுங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்
பாடசாலை தமிழ் மாணவர்களின் பௌத்த பக்தி கீதங்கள் சிங்கள மொழியில் இசைக்கப்பட்டன.
இரத்தினபுரி எஸ். ஆர். இரவீந்திரன்



