கண்டி வத்தேகமை கல்வி வலயத்தின் பன்விலை கோட்டத்திற்குட்பட்ட கந்தகட்டி ஆரம்பிரிவு பாடசாலை, கந்தகட்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் இருந்து பிரிந்து கடந்த ஐந்து வருடங்களாகத் தனித்து இயங்கி வந்தாலும் ஆரம்ப பிரிவுக்கெனத் தரம்பெற்ற அதிபர் ஒருவர் இல்லாமலேயே இயங்கிக்கொண்டிருந்தது.
அந்தக் குறையை நிவர்த்திசெய்யும் வகையில் மத்தியமாகாண கல்வி அமைச்சினால் கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி ராமச்சந்திரன் ரவீந்திரகுமார் எனும் புதிய அதிபர் ஒருவருக்கு பாடசாலையின் அதிபராக நியமனம் வழங்கியது.
புதிய அதிபராகப் பதவியேற்ற ரவீந்திரகுமார் தனது சிறந்த ஆளுமையின் மூலமாகப் பாடசாலையின் பல்வேறு குறைபாடுகளையும் களைந்தது மாத்திரமன்றித் தனது ஆளுமைமிக்க பன்மொழியாற்றலின் பயனாக, சகோதர மொழி கல்விப்பணிப்பாளர்களின் உதவி, நன்கொடையாளர்களின் உதவிகளைப்பெற்றுப் பாடசாலையைச் சிறப்பாக வழிநடத்திச்செல்கின்றார்.
இத்தகைய சூழலில் இரா. இரவீந்திரகுமார் பாடசாலைக்கு வருகை தந்து ஓராண்டு காலம் பூர்தியானமையையொட்டி பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம்,ஆசிரியர்கள் இணைந்து தங்களது மகிழ்ச்சியை கேக்வெட்டி கொண்டாடினர்.
அவரது பணி மேலும் சிறப்பானதாக அமைய வாழ்த்துகளையும் பகிர்ந்தனர். அவருக்கு நாமும் மனமார்ந்த வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கின்றோம்.
சுமன் இராஜேந்திரன் – கந்தகட்டி



