இந்திய உப ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தையொட்டி ஏப்பிறல் 19ஆம் 20 ஆம் திகதிகளில் கொழும்பு நகரத்தையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உப ஜனாதிபதி நாளை (19) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதுடன், அங்கிருந்து அவர் பிரமுகர் வாகனப் பேரணியில் காலி முகத்திடல் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு அழைத்தவரப்படுகிறார்..
இதற்கமைய, அந்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, இந்திய உப ஜனாதிபதி ஹோட்டலிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை பயணிக்கவுள்ளதால், அப்பகுதியிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவ்வாறே 20 ஆம் திகதியும் அவர் பயணிக்கும் பகுதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகிறது.
