கேரளத்திலிருந்து தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி – வால்பாறை பகுதிக்குச் சுற்றுலா சென்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் ஆசிரியைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
கேரளம் – மலப்புரம் மாவட்டத்திலுள்ள இரண்டு பாடசாலைகளின் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தவர்கள் எனப் 13 பேர் நேற்று (17) வால்பாறை சென்று வானொன்றில் திரும்பிக்கொண்டிருந்தபோது அவர்கள் பயணித்த வான், 13ஆவது கொண்டை ஊசி வளைவில் புரண்டு உருண்டு 11ஆவது வளைவில் போய் நின்றுள்ளது.
இதில் எண்மர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.ஒருவர் வால்பாறை மருத்துவமனையில் உயிரிழந்தார். இறந்தவர்களுள் எழுவர் பெண்கள். ஓட்டுநர் உட்பட நால்வர் படுகாயமடைந்தனர்.

