லிந்துலை பாமஸ்டன் தோட்டத்தில் 12பேர் மீது குளவித் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை லிந்துலை பாமஸ்டன் இரத்தினகிரி தோட்டத்தில் இன்று 10:30 அளவில் தொழிலாளர்கள் தொழில் புரிந்து கொண்டிருக்கும் பொழுது 12 தொழிலாளர்களுக்கு குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளார்கள்.
இச் சம்பவத்தில் முத்து நாராயணசாமி என்கின்ற லிந்துலை லிப்பகளை தோட்டத்தைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்கவர் உயிரிழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் லிந்துலை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கௌசல்யா
