சிறைச்சாலை பஸ்ஸை காணொலி எடுத்த பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காலி,உடுகமை நீதவான் நீதிமன்றத்திற்குக் கைதிகளைக் கொண்டு சென்ற சிறைச்சாலை பஸ்ஸைக் காணொலி எடுத்த பெண்ணை எதிர்வரும் ஓகஸ்ட் நான்காம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஹினிகமை, ஹல்விற்றிகலை பகுதியைச் சேர்ந்த 46 வயது பெண்ணே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் உடுகமை நீதிமன்றத்திற்கு முன்பாகவிருந்து தனது கைப்பேசியை மறைத்துவைத்துக்கொண்டு சிறைச்சாலை பஸ்ஸைக் காணொலி எடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவர் தவறான நோக்கத்துடன் கைதிகளைக் காணொலி எடுத்தாரா? என்பதுபற்றிப் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
