ஹற்றன் நகரின் சுகாதாரத் தூய்மை நிலவரம் தற்போது இப்படித்தான்,
நகருக்கு வருவோரும் போவோரும் முகத்தைச் சுளிக்கும் அளவுக்கு நிலைமை நீடிக்கின்றது.
பிரதானமாக இலங்கை மீன் பிடிக் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை செய்யும் நிலையம்,வர்த்தக நிலையங்கள்,வாராந்த சந்தை நடைபெறும் பகுதியில் பாரிய அளவில் குப்பை கூளங்கள் குவிந்து கிடக்கின்றன.
நகர சபையின் முக்கியமான இந்தப் பணியைவிட வேலைப்பளு நிறைந்த பணிகள் இருக்கின்றனவோ! உண்மையில் இது நகர சபையா, நரக சபையா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதன் காரணமாக அப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் அங்கு பொருட்கள் வாங்க செல்லும் பாவனையாளர்கள் சுகாதார சீர் கேட்டை எதிர் நோக்கி வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே: மட்டக்ககளப்பு பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதியில்லை
தற்போதைய ஹற்றன் நகரின் சுகாதாரத் தூய்மை நிலவரம் காரணமாக அப் பகுதியில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தொற்று நோய்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள டெங்கு பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் ஹட்டன் நகர சபை என்ன செய்கிறது.
நகரசபையின் பொது சுகாதார அதிகாரிகள் எங்கே.நகர சபை முதல்வர் உடனடியாக ஹட்டன் நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மஸ்கெலியா நிருபர் செ. தி.பெருமாள்
