லிந்துலை ஓல்டரின் ஆக்ரா ஆற்றில் இன்று (13) நீராடச் சென்றபோது காணாமல்போன மிளகுசேனை தோட்ட மாணவனைக் கண்டுபிடிக்க தீவிரத் தேடுதல் நடந்து வருகிறது.
பாடசாலையில் நடந்த பரீட்சைக்கு முகங்கொடுத்துவிட்டுப் 10 மாணவர்கள் நீராடச் சென்றுள்ளனர்.
அவர்களுள் ஒன்பேது பேர் கரை திரும்பினர். எனினும், மிளகுசேனை (பியபீல்ட்) தோட்டத்தைச் சேர்ந்த பரமநாதன் கிஷோர் (13) என்ற மாணவன் கரைக்கு வரவில்லை.
இவரைக் கண்டுபிடிக்க ஊர் மக்களும் லிந்துலை பொலிஸாரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கௌசல்யா
இதையும் பாருங்கள்: கிலண்டில் தோட்டத்தில் ஆணின் சடலம் மீட்பு
