பாரதி மகா வித்தியாலயம் பழைய மாணவர் கிரிக்கட் போட்டி சனி, ஞாயிறு கிழமைகளில் நடைபெறுகிறது.
தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி சனி, ஞாயிறு (03,04) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகின்றது.
பாடசாலையின் 96 ஆவது கல்லூரி தினத்தை முன்னிட்டு இந்த மாபெரும் மென் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியைப் பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
96 வருடம் பழைமையான பாரதி மகா வித்தியாலயம் பாடசாலயின் அதிபர் பெரியநாயகம் தலைமையில் இந்நிகழ்வு கொட்டக்கலை பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
மஸ்கெலியாவில் கதிர்காமம் யாத்திரை இன்று ஆரம்பம்
இன்றைய ஆரம்ப நிகழ்ச்சியில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் உறுப்பினர் தாழமுத்து சுதாகரன் , Sri Lanka Cricket நிர்வாகத்தின் நுவரெலியா மாவட்ட அதிகாரி பிரபா, தலவாக்கலை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
முதல் நிகழ்வாக இன்று (04)காலை 8.30 இற்கு பாடசாலையின் பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வெற்றிக் கேடயங்கள் வாகனப் பேரணியாக பழைய மாணவர்களால் தலவாக்கலை நகரூடாக கொட்டக்கலை பிரதேச சபை விளையாட்டு மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பாடசாலையில் முன்னாள் அதிபர்கள், தற்போதைய அதிபர், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் , நிர்வாகக் குழு உறுப்பினர்கள், விளையாட்டு போட்டியின் ஏற்பாட்டுக் குழு ஆகியோரால் வெற்றிக் கேடயங்கள் மைதானத்திற்குள் கொண்டு செல்லப்பட்டன .
இப்பாடசாலையில் இருந்து வெளியேறிய 28 வருட அணிகள் இந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றன .
பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறான விளையாட்டு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கௌசல்யா
