பாடசாலை பஸ்ஸின் மீது பாரிய மரம் வீழ்ந்து மகன் இறந்தது தெரிந்தும் “அவன் விளையாடப் போவான்” என்று அவனின் கிரிக்கட் மட்டையைப் பற்றிப் பிடித்தபடி அமர்ந்து புலம்பும் தாயின் பரிதாப நிலை மும்பையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாடசாலை முடிந்த வீடு சென்றுகொண்டிருந்தபோது பஸ்ஸின் மீது மரம் வீழ்ந்துள்ளது. இதில், விகான் சிறிவத்சவா என்ற 11 வயது சிறுவன் உயிரிழந்தான். நால்வர் காயமடைந்தனர். எனினும், மகன் வழமைபோலவே பாடசாலை முடிந்து வந்து விளையாடப் போவான் என்று அவனது தாய் கிரிக்கட் மட்டையுடன் சித்தப் பிரமையற்றுப் புலம்பிக்கொண்டிருப்பதாக என்டிடிவி செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஒரே மகனே உலகம் என்றிருந்த இந்தத் தாய்க்கு நேர்ந்திருக்கும் பேரவலம், நெஞ்சத்தை உருக்கும் நிஜமான தாய்ப்பாசத்தை நெகிழச்செய்கிறது.
வி. அருள்செல்வன் (படம்: என்டிடிவி)
