ஹாலி எல பகுதியைச் சேர்ந்த கவிந்தியா குமாரி என்ற 19 வயது யுவதி ஒருவர் காணாமல் போனதாக அட்டம்பிட்டி காவல் நிலையத்திற்கு முறைப்பாடு வந்துள்ளதாகவும் அவரைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்கள் உதவுமாறும் காவல்துறை தலைமையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஹாலி எல பகுதியைச் சேர்ந்த தாய், தனது மகள் காணாமல் போனதாக மார்ச் 6ஆம் திகதி அட்டம்பிட்டி காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
காணாமல் போன யுவதி, சுமார் 5 அடி 06 அங்குல உயரமும், மெலிவான தோற்றமும் உடையவர்.அவரது கூந்தல் இடுப்பு வரை வளர்ந்திருப்பதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
- பெயர்: ரத்நாயக்க முதியன்செலகே கவிந்தியா பவானி
- வயது: 19 ஆண்டுகள்
- தேசிய அடையாள அட்டை எண்: 200750204474
- முகவரி: ஹெல மொரதொட்ட, ஹாலி எல
இந்தப் புகைப்படத்தில் உள்ள பெண்ணைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக அட்டம்பிட்டி காவல்துறை பொறுப்பதிகாரியை – 071 – 8591528 அல்லது அட்டம்பிட்டி காவல் நிலையத்தை 055 – 2294965 தொடர்பு கொள்ளவும்.
கௌசல்யா
