அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ரூ. 755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களுக்கு (Vetri Thamizhagam vision document) தமிழநாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் மிகவும் முக்கியமான திட்டம் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்”.
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” வடிவமைக்கப்பட்டு இன்று, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
இத்திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள். “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
