சர்வதேச யோகா நாளையொட்டி 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரத்தினபுரி சீவலி விளையாட்டுத் திடலில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் பாடசாலை மாணவர்கள், பிரதேச இளைஞர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை இரத்தினபுரி ‘ஸ்வயம் சேவா சங்கம்’ஏற்பாடு செய்திருந்தது.இதில் சிவன் ஆலய குருக்கள், பௌத்த தேரர்,போலீஸ் நிலைய பிரதான போலீஸ் பரிசோதகர் ஆகியோருடன் மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் சண்முகநாதன், நிவித்திகலை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சகுந்தலா,இரத்தினபுரி பிரதேச சபை உப தவிசாளர் சந்திரகுமார் முதலானோரும் கலந்து கொண்டனர்.






இரத்தினபுரி எஸ். ஆர். இரவீந்திரன்

