நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்பிரகமுவை,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளி மண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல்,சப்பிரகமுலை மாகாணங்களிலும் காலி,மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல்,தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 30-40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
