திக்கோயா நகர் பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர், பொகவந்தலாவை – பெத்தராசி (பெற்றசோ) பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபரிடம் இருந்து தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்
கௌசல்யா
